வெள்ளி, 5 ஜூன், 2009

அம்மா

கருவை சுமந்த திருவே
உந்தன் கால்பட்ட பின் தான்
வயல்கள் கூட வளம் பெற்றன
சுவாசித்த காற்றில் கூட சுயம்நலம் இல்லை
அதுவும் எங்களுக்காக தான்

துஷ்டரை துரத்தி மிதிப்பதவும்
கஷ்டமித்திரருக்கு கரைவதுவும்
உன்னிடமிருந்த கற்ற பாடம்
வயலுக்கு வீட்டுக்கும் நடந்த
உன் ஒவ்வொரு அடியும்
எங்கள் வாழ்க்கையின்
முன்னேற்ற படிகள்.

அன்று பசித்தவருக்கு இட்ட சோறு தான்
இன்று எங்கள் வயிற்றை நிரப்புகிறது
இனியொரு பிறவியில்லை
உன் கருப்பையில் ஜனிக்கையில்
மரணித்தது
அது.

லேபிள்கள்:

1 கருத்துகள்:

Blogger ச.செந்தில்வேலன் / S.Senthilvelan கூறியது…

//வயலுக்கு வீட்டுக்கும் நடந்த
உன் ஒவ்வொரு அடியும்
எங்கள் வாழ்க்கையின்
முன்னேற்ற படிகள்.//

நல்ல வரிகள்

6 ஜூன், 2009 அன்று 9:39 AM  

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு